தி.மு.க.– முஸ்லிம் லீக் கூட்டணி தொடரும்: காதர் முகைதீன் பேட்டி.தி.மு.க. தலைவர் கருணாநிதியை இந்தியன் யூனியன் முஸ்லிம் ‘லீக்’ மாநில தலைவர் காதர் முகைதீன் இன்று சந்தித்து பேசினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.

விழுப்புரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் ‘லீக்’ மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பிதழ் கொடுப்பதற்காக கருணாநிதியை சந்தித்தார்.

மு.க.ஸ்டாலினை மாநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார். சுமார் 20 நிமிட நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது துரைமுருகன் உடன் இருந்தார்.

பின்னர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் தொடர்வோம். அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க. தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்று சேர வேண்டும். தி.மு.க. கூட்டணியை தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர், நிஜாமுதீன், இப்ராகீம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.