டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீச்சு.



டெல்லி நகரில் மாசு அதிகமாகி சுற்றுச்சூழல் பாதிக்கப்படைந்து வருகிறது. இதனால் வாகனப் புகை மாசுவை கட்டுப்படுத்த மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் முடிவு செய்தார்.

இதையடுத்து, வாகனப்புகை அளவை கணக்கிட ஒற்றை, இரட்டைப்படை இலக்கங்கள் கொண்ட வாகனங்களை ஒருநாள் விட்டு ஒரு நாள் இயக்கும் சோதனை ஓட்ட திட்டம் கடந்த 1-ந்தேதி டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சோதனை 15 ஆம் தேதி வரை நடைபெற்றது.

டெல்லி அரசின் இந்த சோதனை அடிப்படையிலான திட்டம் மாபெரும் வெற்றி பெற்றதாக கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள சத்தரஸல் மைதனத்தில் இந்த திட்டத்தின் வெற்றி விழாவின் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

அரவிந்த் கெஜ்ரிவால் விழாவில் பேசிக்கொண்டு இருந்த போது, மேடை அருகே வந்த ஒரு பெண் தீடிரென கெஜ்ரிவால் மை வீசினார். இதில் கெஜ்ரிவாலின் முகத்தில் சில மைத்துளிகள் விழுந்தது. உடனடியாக, அந்த பெண்ணை மடக்கி போலீசார் பிடித்தனர்.

ஆனால், மை வீசிய பெண்ணை விட்டுவிடுமாறு கூறிய கெஜ்ரிவால், டெல்லிக்கு ஏதாவது நல்லது நடைபெற்றால், இதுதான் நடக்கும், அவர் போகட்டும், அவரை விட்டுவிடுங்கள் என போலீசாரை கேட்டுக்கொண்டார். பலத்த பாதுகாப்பையும் மீறி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, மை வீசிய பெண், தனது பெயர் பாவனா எனவும், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி சேனாவை சேர்ந்தவர் என்று கூறினார்.போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.