வியாசர்பாடியில் செல்போன் வெடித்து தீயில் கருகிய கணவன் – மனைவி பலி: மகன் உயிருக்கு போராட்டம்.



சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). நேற்று முன்தினம் இரவு மனைவி ராணி (41). மகன் தினேஷ் (25) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.


ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தினேஷ் அதிகாலை 5 மணிக்கு எழும்புவதற்காக செல்போனில் அலாரம் செட் செய்து வைத்திருந்தார். அப்படியே செல்போனை படுக்கை அறையில் உள்ள மெத்தையில் வைத்து சார்ஜர் போட்டு விட்டு தூங்குவதற்கு சென்றார்.


நேற்று அதிகாலை 5 மணி அளவில் செல்போனில் அலாரம் அடித்தது. அப்போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது செல்போனும் தீப்பிடித்து எரிந்தது. செல்போன் வைக்கப்பட்டிருந்த மெத்தையிலும் தீபிடித்தது.


பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் இந்த தீ மளமளவென கட்டிலுக்கும் பரவி வீடு முழுக்க பற்றியது. இதனால் ராஜேந்திரன், ராணி, தினேஷ் ஆகிய 3 பேரும் அலறியடித்துக் கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்தனர். உடனடியாக அவர்களால் வெளியில் ஓட முடியவில்லை. 3 பேரின் உடலிலும் தீ பற்றியது. வீட்டுக்குள்ளேயே தீயில் சிக்கிய ராஜேந்திரன், ராணி, தினேஷ் ஆகிய 3 பேரும் உடல் கருகினர்.


இது பற்றி தகவல் கிடைத்ததும் அருகில் உள்ள வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் ராஜேந்திரன் தீக்காயங்களுடன் உயிர் தப்புவதற்காக ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியில் வந்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு முதல் உதவி செய்தனர். ராணியையும் அவரது மகன் தினேசையும் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.


3 பேரும் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


ஆனால் நேற்று நள்ளிரவில் ராஜேந்திரனும், இன்று அதிகாலையில் ராணியும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தினேஷ் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


நேற்று முன்தினம் இரவில் வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டிருந்ததாகவும் அப்போது செல்போனில் அலாரம் அடித்ததால் வீட்டில் தீப்படித்தாகவும் கூறப்பட்டது. இதனை ராஜேந்திரனின் உறவினர்கள் மறுத்தனர்.


இது தொடர்பாக அவரது தம்பி சுரேஷ் கூறும்போது, செல்போன் வெடித்தே தீ விபத்து ஏற்பட்டது என்றும், வீட்டில் கியாஸ் கசிந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்றும் கூறினார்.


சார்ஜரில் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்து தீப்பிடித்ததில் 2 பேர் உயிரிழந்திருப்பது அதனை அதிகம் பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.