இன்று அப்துல் நாசர் மதானியை சந்தித்த மார்க்ஸ் அந்தோனிசாமிசற்று முன் பெங்களூரு ஜெயா நகர் மகாபோதி மல்லிகே மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சையில் இருக்கும் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி அவர்களுடன்... ..

பதினைந்து ஆண்டுகள் சிறைவாசம் அவரது உடல் நிலையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த போதும் முகத்திலும் கண்களிலும் கனிவையும் புன்னகையையும் வற்றச் செய்துவிடவில்லை.
ஆயுர்வேதம், அல்லோபதி சிகிச்சைகள் சற்றே அவர் உடலைத் தேற்றியுள்ளன.

சர்க்கரை மட்டும் கட்டுப்படவில்லையாம்.சென்றமுறையைக் காட்டிலும் இப்போது தெளிவாக இருந்தார். வழக்கு நடந்துகொண்டுள்ளது. சாட்சிகள் விசாரிக்கப்படுகின்றனர்.

தமிழக அரசியல் சூழலை விசாரித்தார். மீண்டும் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பிருக்குமா என்றார். அப்படி உறுதியாகச் சொல்ல இயலவில்லை என்றேன். சிறைவாசம் ஜெயாவிடம் ஏதும் மாற்றம் ஏற்படுத்தியுள்ளதா என்றார். அப்படியெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை என்றேன்.

விஜயகாந்த் பாஜகவிடம் போய்விடுவாரா என்றார். இன்னும் உறுதியாகவில்லை என்றேன்.
அவர் கோவைச் சிறையில் இருந்தபோது அவருக்கு ஆதரவாக தமிழக எழுத்தாளர்களிடம் கையொப்பம் வாங்கி அறிக்கை வெளியிட்டதை நினைவுகூர்ந்தார். "கனிமொழி கூட கையெழுத்துப் போட்டிருந்தாங்ககே" என்றார்.

மனம் கனக்க வெளியே வந்தபோது வெளியே காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்வராஜ் மாஸ்டா போலீஸ் வேனிலிருந்த போலீஸ்காரர்கள் வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தனர்...

மார்க்ச் அந்தோனிசாமி.

z4

 

[gallery columns="2" ids="30249,30246,30247"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.