கேபினுக்குள் ஏற்பட்ட புகையால் ஏர் இந்தியா விமானம் அவசரமாக டெல்லியில் தரையிறக்கம்.இன்று டெல்லியில் இருந்து 167 பயணிகளுடன் மிலன் நகருக்கு சென்று கொண்டிருந்தது ஏர் இந்தியா விமானம். இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானி கேபினுக்குள் புகை கிளம்பியது.


இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பி கொண்டுவரப்பட்டு சுமார் 4.40 மணியளவில் தரையிறக்கப்பட்டது.


167 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான கேபினிற்குள் தீடிரென புகை கிளம்பியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக மிலன் அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.