விபத்தில் பலியான புதுப்பெண்: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்.தமிழகத்தில் நடந்த விபத்தில் நாளை திருமணம் நடைபெறவிருந்த புதுப்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து- சாவித்திரி தம்பதியின் மகள் சுகந்தி (26). இவருக்கு நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில், ஏற்பாடுகள் படுஜோராக நடந்தன.

இந்நிலையில் அரசு வழங்கும் உதவித் தொகை விண்ணப்பிக்க, சாவித்திரி தனது மருமகன் ஸ்டாலின்(35) என்பவரின் இருசக்கர வாகனத்தில் தனது மகள் சுகந்தியுடன் அரியலூர் நோக்கி நேற்று மதியம் சென்றனர்.

இருசக்கர வாகனத்தை ஸ்டாலின் ஓட்டிச்சென்றார். அரியலூரை அடுத்த தாமரைக்குளம் அண்ணா சிலை அருகே ஸ்டாலினின் இருசக்கர வாகனம் வந்தபோது, எதிர்புறத்தில் அரியலூரில் இருந்து ஒட்டக்கோயிலிலுள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு சிமெண்ட் ஏற்றுவதற்காக லாரி ஒன்று வேகமாக வந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த அந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பலியாகினர்.

நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், புதுப்பெண் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விபத்திற்கு காரணமாக நபரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே சிமெண்ட் ஆலைகளால் இப்படியான கோர விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும், இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியும் பொதுமக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.