முத்துப்பேட்டை அருகே கார் பைக் மோதல். வாலிபர் படுகாயம்.முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் மகன் செந்தில்(28). இவர் நேற்று மதியம் முத்துப்பேட்டைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு பைக்கில் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆலங்காடு கடைத்தெருவில் திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக செந்தில் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செந்திலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் செந்தில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த சப் - இன்ஸ்பெக்டர் வில்லியம்ஸ், விபத்துக்குள்ளான கார் மற்றும் பைக்கைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

படம் & செய்தி: மு.முகைதீன் பிச்சை.

1. முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கடைத்தெருவில் விபத்துள்ளான கார்.
a1
2. விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றும் பொதுமக்கள்.
a2
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.