முத்துப்பேட்டை விபத்தை கண்டித்து SDPI கட்சியின் கண்டன போஸ்டர். மற்றும் விபத்தின் புதிய படங்கள் இணைப்பு.கடந்த 29/12/2015 அன்றுதான் பேரூராட்சியின் நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்து Sdpi கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம் நடத்தி ஒரு சில நாட்களே கடந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சி முக்கிய சாலையான ECR ரோட்டில் குப்பைகளை கொட்டி தீ வைத்து உள்ளனர்.

அதில் ஏற்பட்ட புகைமண்டலத்தால் முக்கிய சாலையான ECR சாலையே தெரியாமல் மறைந்தன. அப்போது சாலையில் நிருத்தி வைக்கப்பட்ட பேரூராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் கிடப்பது தெரியாமல் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. அதைத்தொடர்ந்து மீன்லோடு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்தானது.

இதில் நான்கு வயது குழந்தை சம்பவ இடத்தில் உயிர் இழந்தது. மற்றும் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். சம்பவம் நடந்ததை கண்டித்து அனைத்து தரப்பினரும் சாலைமறியலில் ஈடுபட்டனர். பல மணி நேரமாகியும் பேரூராட்சி நிர்வாகம் யாரும் சம்பவ இடத்திற்கு வராதது மேலும் மக்களை வெறுப்படைய செய்தது.

புகைப்படங்கள் சரன் அகாஸ் & முகைதீன் பிச்சை.

[gallery columns="2" ids="30133,30134,30135,30136,30137,30139,30141,30142,30143,30144,30145,30146,30147,30148,30149,30150,30151,30152"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.