முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி முதல்வர் மற்றும் 130 பெற்றோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவுமுத்துப்பேட்டை செக்கடிகுளத்தில் ஆக்கிரமிப்பு நடந்திருப்பாதாக கூறி குளத்தில் கரையில் உள்ள வீடுகள், பள்ளிவாசல் சுவர், நடைபாலம் இடிக்கப்பட்டது. மேலும் ரஹ்மத் பெண்கள்மேல் நிலைப்பள்ளி நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு நடந்து இருப்பதாக கூறி பள்ளியின் தடுப்பு சுவர் மற்றும் பள்ளியின் நுழைவாயில் அகற்றப்பட்டது. சுற்றுச் சுவரின் சில பகுதிகளை இடித்து அகற்றி விட்டு பள்ளி முன்புள்ள பாலத்தை உடைக்க முயன்றனர். அப்போது பள்ளி ஆசிரியைகள் மற்றும் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கல்யாணசுந்தரம், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் செந்தில், கீழக்காடு ஊராட்சி தலைவர் மணி கண்டன், மமக மாவட்ட செயலாளர் தீன் முகம்மது மற்றும் பலர் திரண்டு வந்து பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து 09-02-2016 அன்று ரஹ்மத் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பேரூராட்சி முற்றுகையிட்டு பிறகு பள்ளிக்கு செல்லும்பாலத்தை உடைக்காமல் இருக்க பேரூராட்சி துணைத்தலைவர் அவர்களின் மனு கொடுக்கப்பட்டது. பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். முன் அனுமதி பெறாமல் பேரூராட்சியை முற்றிகையிட்ட முதல்வர் மற்றும் 130 பெற்றோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.