முத்துப்பேட்டை பகுதிகளில் பிப்ரவரி 16,17-ல் குடிநீர் விநியோகம் இருக்காதுபிப்ரவரி 11: வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால்,

வரும் 16,17-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் திருவாரூர் பராமரிப்புக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் தஞ்சாவூர்-திருவாரூர்-நாகப்பட்டினம் மாவட்டங்களில் பயன்பெறும் குடிநீர் செல்லும் பிஎஸ்இ குழாய் நீடாமங்கலம்-கும்பகோணம் சாலை, தொழுவூர், மண்டபம், மேட்டுச்சாலை ஆகிய இடங்களில் வரும் பிப். 15,16-ம் தேதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி நடைபெறவுள்ளது. இதனால், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் நகராட்சிகள், முத்துப்பேட்டை, தலைஞாயிறு பேரூராட்சிகள், கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் வழங்க இயலாது. எனவே, அப்பகுதிகளைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.