வெல்டரின் மகனுக்கு மைக்ரோசாப்ட்டில் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை.பீகாரில் வெல்டரின் மகனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.02 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

பீகார் மாநிலம் காகரியா பகுதியில் உள்ள சான்ஹவ்லி கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் என்பவர் வெல்டிங் வேலை செய்பவர். அவரது மகன் வத்சல்யா சிங் சவுகான் (21) மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கராக்பூரில் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டு வருமானம் ரூ.1.02 கோடிக்கு வேலை கிடைத்துள்ளது.

இது குறித்து சவுகானின் தந்தை சந்திரகாந்த் கூறுகையில், நான் வங்கியில் ரூ.3.50 லட்சம் கல்விக் கடன் பெற்று அவனை ஐஐடியில் சேர்த்தேன். தற்போது, அப்பா, எனக்கு மைக்ரோசாப்ட்டில் வேலை கிடைத்துள்ளது என்று அவன் கூறியதை கேட்டு ஆனந்தக் கண்ணீர்விட்டேன் என தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.