வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 2½ கிலோ தங்கம் பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைதுஆலந்தூர், பிப். 13–

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த ஷகிலா (வயது38) என்ற பெண்ணின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் ஒன்றும் கிடைக்கவில்லை. அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர்.

அப்போது அவர் தனது கால் மூட்டில் மூட்டு வலிக்கு பயன்படுத்தும் பெல்ட்டை அணிந்து அதற்குள் 2 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். இதையடுத்து ஷகிலாவை கைது செய்து 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கோலாலம்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னைக்கு மலேசிய விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முரளி (26) என்ற வாலிபரின் மீது சந்தேகம் வரவே அவரை நன்கு சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலின் பின்புறம் ஒரு பார்சலை மறைத்து வைத்திருந்தார். அதை அதிகாரிகள் பிரித்து பார்த்த போது அரை கிலோ தங்கம் இருந்தது.

இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். முரளி கைது செய்யப்பட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.