இந்தியாவில் 2 நொடிகளில் 70 ஆயிரம் ஸ்மார்ட்போன்களை விற்று சீன நிறுவனம் சாதனை.சீனாவைச் சேர்ந்த எலக்ட்ரானிக் நிறுவனமான லிஈகோ தனது லேட்டஸ்ட் 4G ஸ்மார்ட்போன் Le 1s மாடலை இந்தியாவில் சலுகை விலையில் விற்க முன்வந்தது.

இதற்காக, பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான பிளிப்கார்ட்டில் ப்ளாஷ் விற்பனை அடிப்படையில் ஆபர் விலையில் வெளியிட்டது.

இன்று நடைபெற்ற ப்ளாஷ் விற்பனையில் லிஈகோ நிறுவனம் வெறும் 2 நொடிகளில் 70 ஆயிரம் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்றுள்ளது. இதை பிளிப்கார்ட் தலைமை வர்த்தக அதிகாரி அங்கித் நகோரி உறுதி செய்துள்ளார்.

இந்தியாவில் 300 நகரங்களில் 555-க்கும் மேற்பட்ட சர்வீஸ் சென்டர்களை கொண்ட லிஈகோவின் லேட்டஸ்ட் மாடலான Le 1s ஸ்மார்ட்போனில் குயிக் சார்ஜ் வசதி தரப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த போனை வாங்குவதற்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.