நான்தான் திருமணம் செய்தேன், எனக்குத்தான் சொந்தம் என்று ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டி : சேலத்தில் நடந்த ருசிகரம்நான்தான் கணவர் என ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டிபோட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் நீதிமன்ற உத்தரவின்படி, அந்த பெண், தாயுடன் அனுப்பிவைக்கப்பட்டார்.

சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் 24வயது பெண். இவர் பி.காம் பட்டதாரி. அதே பகுதியில் தூத்துக்குடியை சேர்ந்த அம்ஜத்கான்(30) நடத்திவந்த செருப்பு கடையில் வேலை செய்தார். கடந்த 21ம் தேதி வேலைக்கு சென்ற அந்த பெண், வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வேலை பார்த்த செருப்பு கடையும் மூடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் படம் ஒன்று வந்தது. அதனை பார்த்தபோது, காணாமல்போன பெண்ணும் செருப்பு கடை உரிமையாளர் அம்ஜத்கானும் மாலையுடன் இருந்தனர்.

இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இத்தகவலை பள்ளப்பட்டி போலீசாருக்கு கொடுத்தனர். இதையடுத்து போலீசார்,செல்போன் டவர் மூலம் ஆய்வு செய்ததில் தேவகோட்டையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் பெண்ணையும் அம்ஜத்கானையும் பிடித்தனர். இருவரையும் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.

அப்போது பெண்ணின் கணவர் என்று கூறி அவரது உறவினரான காய்கறி வியாபாரி ராஜேஸ்கண்ணா(27) வந்தார். அவர், “அந்த பெண்ணை 10 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். 2 மாதத்திற்கு முன் நான் தான் திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு நான் தான் கணவர். என்னுடன் தான் அனுப்பவேண்டும்’ என்றார்.

ஆனால் செருப்பு கடை உரிமையாளரோ, ‘’நாங்கள் 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நான் தான் கணவர். எனவே என்னுடன் தான் அனுப்ப வேண்டும்’ என்றார். ‘’ மகளை எங்களுடன் அனுப்பிவையுங்கள் என்று பெண்ணின் பெற்றோர் கதறினர்.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சேலம் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் முன் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த பெண், தாயுடன் செல்வதாக கூறினார். இதையடுத்து தாயுடன் அனுப்பி வைத்தனர்.

இதன்பிறகு செருப்புக்கடை உரிமையாளர் அம்ஜத்கான் ஏமாற்றத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார். காய்கறி வியாபாரி ராஜேஸ்கண்ணா நீதிமன்றம் வரவில்லை.ஒரு பெண்ணுக்கு 2 பேர் சொந்தம் கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.