ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது அமீரகம்ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மிர்புரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் அம்ஜத் ஜாவேத் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக அணியும், அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரர்கள் ரோகன் முஸ்தபா, முகமது கலீம் ஆகியோர் தலா ஒரு ரன்னில் அவுட் ஆகினர். முகமது சமீத் 5 ரன்களும், உஸ்மான் முஸ்தாக் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 41 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அதேசமயம், 4-வது வீரராக களமிறங்கிய ஷாய்மன் அன்வர் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக அப்ரிடி, முகமது நவாஸ் ஆகியோரின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் 46 ரன்களில் அவுட் ஆனார்.

அவரைத்தொடர்ந்து முகமது உஸ்மான்-கேப்டன் அம்ஜத் ஜாவேத் ஜோடியும் பொறுப்புடன் விளையாடியது. முகமது உஸ்மான் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர் முடிவில் அமீரகம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அஜ்மத் ஜாவேத் 27 ரன்களுடனும், முகமது நவீத் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர், முகமது இர்பான் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.