நேபாளத்தில் காணாமல் போன விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிப்பு : பயணம் செய்த 23 பேர் பலி



காத்மாண்டு : நேபாளத்தில் 23 பேருடன் சென்ற சிறிய ரக விமான விபத்துக்குள்ளானது. விமானத்தில் சென்ற 23 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 20 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் நேபாளத்தில் உள்ள பொஹாராவில் இருந்து ஜாம்சன் என்ற இடத்தை நோக்கி இன்று புறப்பட்டு சென்றது.

 

அந்த விமானம் சிறுது நேரத்திலேயே விமான நிலையம் உடனான தொடர்பை இழந்தது. விமானம் புறப்பட்ட காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் 3 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது அந்த விமானம் வெடித்து சிதறியதாகவும், அதில் பயணம் செய்த 23 பேரும் உயிரிழந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேபாள விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.