ரூ.251–க்கு ஸ்மார்ட்போன்: வாங்கிய முன் பணத்தை திருப்பித் தர முடிவு 

நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘ரிங்கிங்பெல்ஸ்’ நிறுவனம், உலகிலேயே மிக குறைந்த விலைக்கு அதாவது ரூ.251–க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்யவும் அழைப்பு விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து ‘ப்ரீடம் 251’ என்று பெயரிடப்பட்ட அந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்க நாடு முழுவதும் மக்களிடையே பேரார்வம் ஏற்பட்டது. அந்த நிறுவனம் அறிவித்திருந்த இணையதள முகவரியில் போனுக்காக பதிவு செய்ய ஏராளமானோர் முயன்றனர். இதனால் இணையதளமே முடங்கியது. பின்னர் ஒரு நாள் இடைவெளிக்குப்பின் அந்த நிறுவனத்தின் இணையதளம் சீரானது.

உடனே லட்சக்கணக்கானவர்கள் ஸ்மார்ட் போனுக்காக பதிவு செய்தனர். அவர்களுக்கு பணம் செலுத்துவதற்கான விவரம் அடங்கிய ‘லிங்க்’ 48 மணி நேரத்தில், அவர்கள் வழங்கியிருந்த ஈ–மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இது தொடர்பாக யாருக்கும் இதுவரை தகவல் வரவில்லை.

இந்த நிலையில் ஸ்மார்ட்போன் வாங்க பதிவு செய்திருந்தவர்கள், முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டாம் எனவும், போன் கையில் கிடைக்கும் போது பணம் செலுத்தினால் போதும் (கேஷ் ஆன் டெலிவரி) எனவும் ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் அசோக் சத்தா ஒரு செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்குவதற்குள் சுமார் 30 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியிருந்தனர். அவர்களது பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.