நாச்சிக்குளம் பஸ்சில் தகராறு கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைதுதிருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு மெக்கானிக் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் அரவிந்த். இவரும் அதே கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர்கள் இருவருக்கும் இடையே நாச்சிக்குளத்தில் இருந்து கல்லூரிக்கு பஸ்சில் செல்லும்போது படிக்கட்டில் நிற்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
கடந்த 23–ந் தேதி தாணிக்கோட்டகத்தை சேர்ந்த 3–ம் ஆண்டு மாணவர் நாகராஜ், அதே ஊரை சேர்ந்த மாணவர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் இருவரும் பஸ்சில் தாக்கப்பட்டனர்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் உறுப்பு கல்லூரி 2–ம் ஆண்டு மாணவரான கொற்கை வடக்கு தெருவை சேர்ந்த சண்முகானந்தம் மகன் சபரிநாதன் (வயது19), மற்றும் 17 வயதுள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் என்பதும் இவர்கள் இருவரும் நாகராஜ், தமிழ்ச்செல்வனை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சபரிநாதன் மற்றும் 17 வயதுள்ள வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.