தஞ்சை பஸ்சில் நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளை.கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விக் னேஷ்(45). இவர் நகைக் கடைகளில் ஆர்டர் பெற்று நகைகள் செய்து சப்ளை செய்து வருகிறார்.

கடந்த 31ம் தேதி இரவு விக்னேஷ் கோவையில் இருந்து 2 கிலோ தங்க நகைகளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு ரயில் மூலம் நேற்று முன் தினம் தஞ்சை வந்தார். பின்னர் தஞ்சையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பஸ்சில் கும்பகோணம் செல்வதற்காக ஏறினார்.

தங்க நகைகள் உள்ள பையை தலைக்கு மேல் பயணிகள் பெட்டிகளை வைக்கும் கேரியரில் வைத்தார். கேரியருக்கு கீழே 3 பேர் அமரும் சீட்டில் அமர்ந்தார். பஸ் புறப்பட தயாரான நிலையில் இவர் அருகில் 2 வாலிபர்கள் வந்து அமர்ந்தனர்.

பின்னர் விக்னேஷ் தூங்கி விட்டார். பசுபதி கோவில் என்ற இடத்தில் பஸ் வந்த போது விழித்த விக்னேஷ் நகைகள் உள்ள பை இருக்கிறதா என பார்த்தார். அப்போது நகைப் பையை காணவில்லை. இவரது அருகில் இருந்த 2 வாலிபர்களையும் காணவில்லை.

அதிர்ச்சியடைந்த அவர் பஸ் முழுவதும் தேடினார். கிடைக்கவில்லை. அப்போது பஸ் அய்யம் பேட்டை வந்து சேர்ந்தது. இதனால் விக்னேஷ், பஸ்சில் இருந்து இறங்கி அய்யம் பேட்டை போலீசில் புகார் செய்தார். மனு ரசீது மட்டும் கொடுத்த போலீசார் இந்த திருட்டு தஞ்சை மேற்கு போலீஸ் சரகத்தில்தான் நடந்திருக்கும் எனவே அங்கு போய் புகார் கொடுங்கள் என்றனர்.

அதன்படி விக்னேஷ், தஞ்சை மேற்கு போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். அங்கும் போலீசார் எப்.ஐ.ஆர் போடவில்லை. நகை 2 கிலோ இருந்ததா, அதற்கு பில் இருக்கிறதா என போலீசார் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். இது குறித்து தஞ்சை எஸ்.பியிடம் புகார் செய்யப் போகிறேன் என விக்னேஷ் கூறினார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘நகைப் பையை கொண்டு வந்தவர் கேரியரில் எதற்கு வைத்தார். அவர் நகைப்பை மாயமானதாக கூறுவதில் எந்தளவு உண்மை உள்ளது என்பது விசாரணையில் தான் தெரிய வரும்’ என்றனர்.

ஓடும் பஸ்சில் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.