30 ஆண்டுகளில் இயந்திர மனிதர்களால் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்கும்நவீன கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் இயந்திரமயமாகி கொண்டுவருகிறது. விரைவில் மனிதர்களின் வேலைகள் அனைத்தையும் இயந்திர மனிதர்கள் கைப்பற்றிவிடும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் வளர்ந்துவரும் நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்னும் 30 ஆண்டுகளில் இயந்திர மனிதர்களால் 50 சதவித மக்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என்று ரைஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோஷி வார்தி என்பவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிவியல் நிகழ்ச்சி ஒன்றில் மோஷி வார்தி பேசும் போது கூறியதாவது:-

அனைத்து வேலைகளையும் மனிதர்களை விட சிறப்பாக இயந்திரங்கள் செய்யும் காலக்கட்டத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கோம்.

அதேவேளையில் எல்லா வேலைகளையும் இயந்திரங்கள் செய்தால், மனிதர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியை முன்நிறுத்த நான் வேண்டுகிறேன்.

வரும் 2050ஆம் ஆண்டுக்குள் மனிதர்களின் அனைத்து வேலைகளையும் இயந்திரங்கள் கைப்பற்றிவிடும். இதனால் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் வேலை இல்லாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்படுவர்.

மேலும் அத்தகைய சூழ்நிலையை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இதே கருத்த புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஸ்டீபன் ஹாக்கிங்கும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.