லஞ்சம் வாங்கிய வழக்கில் நெல்லை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்நெல்லை, பிப். 20–

திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். இவர் கடந்த 1.6.2007ம் தேதி நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.

அப்போது சொத்து பிரச்சினை தொடர்பாக சி.என்.கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரை விடுவிக்க இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் லஞ்சம் கேட்டுள்ளார். ராஜகோபால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் சொல்லி விட்டு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நெல்லை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜெயசிங் விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 14 பேர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

ராஜேந்திரனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயசிங் தீர்ப்பு அளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ரஞ்சித்ராஜ் ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தீர்ப்பை எதிர்த்து மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார். இதற்காக அவருக்கு வருகிற 18–ந்தேதி வரை ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.