தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உள்பட ராணுவ வீரர்களின் உடல்களும் இன்று டெல்லி கொண்டு வரப்படுகின்றனபுதுடெல்லி,

காஷ்மீரில் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிர் இழந்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 9 ராணுவ வீரர்களின் உடல்களும் இன்று டெல்லிக்கு கொண்டு வரப்படுகின்றன.

உடல்கள் மீட்பு
காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பகுதியில் கடந்த 3–ந் தேதி பாதுகாப்பு பணியில் இருந்த 10 ராணுவ வீரர்கள் பனிப்பாறை சரிவில் சிக்கினர். அவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. பெரும் முயற்சிக்குப்பின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் உயிருடன் மீட்கப்பட்டார்.

மயக்க நிலையில் இருந்த ஹனுமந்தப்பா உடனடியாக டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உயிர், நினைவு திரும்பாமலேயே பிரிந்தது.

மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த எம்.ஏழுமலை, எஸ்.குமார், கணேசன், ராமமூர்த்தி உள்பட 9 ராணுவ வீரர்கள் பனிச்சரிவுக்குள் இறந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன.

இன்று டெல்லிக்கு...
9 ராணுவ வீரர்களின் உடல்களும் சியாச்சின் ராணுவ தளத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், உடல்களை டெல்லிக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காலநிலை ஒத்துழைத்தால், வீரர்களின் உடல்கள் இன்று (திங்கட்கிழமை) டெல்லிக்கு கொண்டு வரப்படும்’ என்றார். பின்னர் டெல்லியில் இருந்து வீரர்களின் உடல்கள், அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 வீரர்களின் உடல்களும் அடங்கும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.