டியூப் லைட்” வேண்டாம் “எல்.இ.டி” போதும் – 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமித்து சாதித்த ஆந்திராடியூப் லைட்” வேண்டாம் “எல்.இ.டி” போதும் – 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமித்து சாதித்த ஆந்திரா

ஆந்திராவில் எல்.இ.டி விளக்குகளை மக்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்ததன் மூலமாக அங்கு மின்சாரஉபயோகம் குறைந்து அதிகளவில் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் எல்.இ.டி பல்புகளை அதிகளவில் பயன்படுத்த மின்சார வாரியம் சார்பாக மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அங்குள்ள 13 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் எல்.இ.டி பல்புகளை அரசு புழக்கத்திற்கு கொண்டு வந்தது. இதன் பயனாக சென்ற ஆண்டில் 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமித்துள்ளதாக அம்மாநிலம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அங்கு எடுக்கப்பட்ட சர்வேயில் ஆந்திர அரசு 57.03 லட்சம் எல்.இ.டி பல்புகளை மக்களுக்கு வினியோகித்துள்ளது. இதனால் மின்சார உபயோகம் பெருமளவில் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.