இலங்கை தமிழர் பகுதியில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை: 4 மாவட்டங்களில் கடையடைப்புஇலங்கையில் தற்போது அமைதி நிலவினாலும் தமிழக பகுதி முழுவதும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

இதனால் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

 

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். பண்டாரி குளத்தை சேர்ந்த ஹரிஸ்னா என்ற மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் அவரை கற்பழித்து கொலை செய்துள்ளனர்.

 

இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மாணவி கற்பழிப்பு சம்பவத்தை கண்டித்தும் போலீஸ் அதிகாரத்தை முழுமையாக மாகாண அரசுக்கு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியும் கடை அடைப்பு சம்பவம் நடந்தது.

வவுனியா, கிளிநொச்சி முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கடை அடைப்பில் ஈடுபட்டனர். தனியார் பஸ், ஆட்டோ ஆகியவைகளும் ஓடவில்லை. இதன் காரணமாக அங்கு பதட்டம் நிலவியது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.