50 லட்சம் ஸ்மார்ட் போன்கள் (ரூ.251) இறக்குமதி : ரிங்கிங் பெல்ஸ் திட்டம்.மிக குறைந்த விலையுள்ள (ரூ.251) ஸ்மார்ட்போனை விற்பனை செய்யப்போவதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது.

இதனால் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் மத்திய அரசு அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் நிறுவனர்களை சந்தித்து பேசினார்.

அந்த நிறுவனம் 50 லட்சம் ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்யப்போவதாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஸ்மார்ட்போனுக்காக இதுவரை 6 கோடி நபர்கள் முன்பதிவு செய்திருக்கின்றனர். நிறுவனம் 50 லட்சம் போன்களை வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதில் 25 லட்சம் போன்கள் ஆன்லைன் மூலமாகவும், ஆன் லைன் மூலம் இல்லாமல் முன்பதிவு செய்தவர்களுக்கு 25 லட்சம் போன்களையும் டெலிவரி செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா மற்றும் நிறுவனர் மோகித் கோயல் ஆகியோர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி களை சந்தித்து தங்களது `விற்பனை உத்தியை’ விவரித்தனர்.

அப்போது தேவையை பூர்த்தி செய்ய 50 லட்சம் ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்வதாக ரிங்கிங்பெல்ஸ் அதிகாரிகள் கூறினர். உதிரி பாகங்களை தாய்வானில் இருந்து இறக்குமதி செய்து நொய்டாவில் உள்ள ஆலையில் செல்போனை நிறுவனம் தயாரிக்கிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.