500 ரூபாய்க்கு சோலார் விளக்கு.. 5 வருடம் யூஸ் பண்ணலாம்.. செங்கை மாணவர் தாஜூதீன் சாதனை!தமிழகத்தில் மின் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுகின்ற நிலையில் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில் ரூபாய் 500 மதிப்பீட்டில் 5 ஆண்டுக்கு பயன்படும் வகையில் சூரிய சக்தி விளக்கை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார் மாணவர் ஒருவர். செங்கல்பட்டினைச் சேர்ந்த தாஜூதீன் என்னும் அம்மாணவர் ஒரு பி.டெக் பட்டதாரி. அப்பா அஹசனூதீன், கால்நடை மருத்துவர். அம்மா, ஜெரினாசுல்தான். இவர் மூன்றாவது மகன். செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளில் படித்துவிட்டு சென்னை வந்து பி.டெக் முடித்துள்ளார். ஒருநாள் இணையதளத்தின் மூலமாக அவருக்கு தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு நண்பர் அறிமுகமாகியுள்ளார்.

3 வருடங்களுக்கு முன்பு அவருடைய வழிகாட்டுதலுடன் சூரிய ஒளியில் எரியும் விளக்கை தயாரித்துள்ளார் தாஜூதீன்.

இந்நிலையில் சமூக நல ஆர்வலரான பார்த்திபன் என்பவர், "ரொம்ப குறைஞ்ச செலவுல ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தறா மாதிரி சூரிய விளக்கை தயாரிச்சிருக்கீங்க. இது ஏழைகளுக்கு பயன்படனும்" என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து மும்பை, தாரவி சென்று அங்குள்ள குடிசை வீடுகளுக்கு இந்த விளக்கினை தயாரித்து கொடுத்துள்ளார். தாஜூதீன் ரூபாய் 20 செலவில் இருட்டான வீடுகளில் பகலில் மட்டும் வெளிச்சம் கொடுக்கும் வகையில் சூரிய மின்விளக்கை செய்து கொடுத்திருக்கிறார். இதன் செய்முறையையும் அங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

5 வருடங்களுக்கு கவலையில்லை: ‘‘

சூரிய ஒளியை சோலார் பேனல் உள்வாங்கி பேட்டரில சேமிக்கும். நைட் சுவிட்ச் போட்டதும் வெளிச்சம் வரும். இதுக்கான செலவு வெறும் ரூபாய் 500தான். ஆனா, ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்து வெளிச்சம் தரும்'' என்கிறார் தாஜூதீன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.