சேலம் கோர்ட்டு வளாகத்தில் வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயற்சி: திருவாரூர் கோர்ட்டில் 5 பேர் சரண்சேலம் கோர்ட்டு வளாகத்தில் ரவுடியை கொலை செய்ய முயன்றது தொடர்பான வழக்கில் திருவாரூர் கோர்ட்டில் நேற்று 5 பேர் சரண் அடைந்தனர்.

ரவுடி

சேலம் கிச்சிப்பாளையம் சுந்தர்தெருவை சேர்ந்தவர் செல்லதுரை (வயது28). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடை பயிற்சிக்கு சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் கிச்சிப்பாளையம் போலீசார் செல்லதுரையை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கோர்ட்டு மூலம் நிபந்தனை ஜாமீன் பெற்ற செல்லதுரை கடந்த சில வாரங்களாக சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் தினமும் 2 வேளை கையெழுத்து போட்டு வருகிறார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்காக செல்லதுரை தனது உறவினரான ஜான் (23) மற்றும் சக்தி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

வெடிகுண்டு வீச்சு

கையெழுத்து போட்டு விட்டு செல்லதுரை உள்பட 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது கோர்ட்டின் முதல் நுழைவு வாயில் அருகே செல்லதுரையின் நண்பர் தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் பகுதியை சேர்ந்த அழகுவேல் (24) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவருடன் செல்லதுரை பேசி கொண்டிருந்தபோது அப்பகுதியில் மறைந்து இருந்த 15 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆயுதங்களுடன் செல்லதுரையை நோக்கி ஓடி வந்தனர். அந்த கும்பலில் ஒருவன் தனது கையில் வைத்திருந்த நாட்டு வெடி குண்டை செல்லதுரை மீது வீசினார். அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய செல்லதுரையை, அந்த கும்பல் அரிவாளுடன் துரத்தியது. அவருடன் ஜான், சக்தி, அழகுவேல் ஆகியோரும் ஓடினர்.

ஆனால் அழகுவேலை அந்த கும்பல் தலையில் அரிவாளால் வெட்டியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மற்ற 3 பேரும் கோர்ட்டு வளாகத்தில் இருந்த போலீசாரிடம் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

5 பேர் சரண்

இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை திருவாரூர் கோர்ட்டில் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் சிலம்பரசன் (31), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் விக்னேஷ் (24), மணி மகன் ஜெயக்குமார் (24), சேலம் காந்தி நகர் பனைமரத்துப்பட்டியை சேர்ந்த முருகேஷ் மகன் வெங்கடேசன் (34), சேலம் தாதகாப்பட்டி ஜவகர் நகர் போஸ்ட் ஆபீஸ் வீதியை சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் (25) ஆகிய 5 பேர் சரண் அடைந்தனர். இதையடுத்து 5 பேரும் சேலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.