60,000 குழந்தைகள் மாயம்: கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறல்மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.2.5 கோடி செலவிட்டும், 4 ஆண்டுகளில் காணாமல் போன 60 ஆயிரம் குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை யின் மூத்த உயரதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 1,94,213 குழந்தை கள் மாயமானதாக அறிக்கை சமர்ப் பிக்கப்பட்டது. அதில் 1,29,270 குழந்தைகள் மீட்கப்பட்டு, குடும்பத் தினருடன் சேர்த்து வைக்கப்பட்ட னர். எனினும் 64,943 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர் கள் கடந்த ஜனவரி 2012 முதல் பிப்ரவரி 2016 வரை காணாமல் போனவர்கள்’’ என தெரிவித் துள்ளார்.

வீடுகளை விட்டு ஓடுவது, கடத்தல் மற்றும் இயற்கை சீற்றங் களால் குழந்தைகள் காணாமல் போவதாகவும், அவர்களை கண்டு பிடிக்க ஆண்டுக்கு ரூ.2.5 கோடி மத்திய அரசு செலவிடுவதாகவும் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்க மாநிலத்தில் இருந்து இதுவரை 44,095 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர் களில் 36,055 பேர் மீட்கப்பட்டுவிட்ட னர். உத்தரப் பிரதேச மாநிலம் இதில் 2வது இடத்தில் உள்ளது. குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கவும், விரைந்து மீட்கவும் மத்திய அரசு ‘டிராக் சைல்டு’ உள்ளிட்ட இணையதளங்களை உருவாக்கி இருப்பது குறிப்பிடத் தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.