குவைத்திற்கு சென்ற மகளை 7 ஆண்டுகளாகியும் காணவில்லை!குவைத்திற்கு வேலைக்கு சென்று கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தகவலும் இல்லாமல் இருக்கும் மகளை மீட்க வேண்டும் என்று திருச்சியில் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே விஜயபுரத்தைச் சேர்ந்த நாகூர் கனி என்பவரின் மகள் சபியா, கடந்த 2004ம் ஆண்டு, முகவர் ஒருவர் மூலம் குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மூன்று ஆண்டுகள் வரை சபியா, மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை வீட்டிற்கு அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடம் இருந்து எந்தவித தொடர்பும் இல்லை என பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் சபியாவை அனுப்பிய ஏஜெண்டையும் தொடர்பு கொள்ள முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள், இன்று மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மேலும் குவைத்தில் உள்ள மகளை கண்டறிந்து பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.