ஜெர்மன் அகதிகள் முகாமிலிருந்து 8 வயது மகளுடன் மீட்கப்பட்ட இந்தியப் பெண்.பலருக்கு வெறும் பொழுது போக்காக மட்டுமே உள்ள சமூக வலைதளங்கள் தான், பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவியாய் உள்ளது. அந்த வகையில், சமுக வலைதளத்தின் மூலமாக ஜெர்மன் நாட்டு அகதிகள் முகாமில் சிக்கித்தவித்த இந்தியப் பெண் ஒருவர் தனது 8 வயது மகளுடன் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய் அன்று, இந்தியாவைச் சேர்ந்த குர்ப்ரீத் என்ற தாய் இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றினார். வீடியோவில் இந்தியில் பேசிய குர்ப்ரீத், தன் கணவரின் குடும்பத்தினரால் ஏமாற்றப்பட்டு தானும் தன்னுடைய 8 வயது மகளும் ஜெர்மன் நாட்டுக்கு வந்து, அங்குள்ள அகதிகள் முகாமில் சிக்கித் தவிப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் வேண்டுகோள் வைத்தார்.

இவரது இந்த வீடியோ யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது, பின்னர், அது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பார்வைக்கும் வந்தது. உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெர்மன் நாட்டின் பிராங்பர்ட் நகரில் உள்ள தூதரகத்துடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர். மேலும், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள குர்ப்ரீத்தின் தந்தையும் அவர்கள் தொடர்பு கொண்டனர்.

ஜெர்மன் நாட்டிலிருந்து இந்தியா வருவதற்கான, அவசரகால சான்றிதழை அங்குள்ள இந்தியத்தூதரகம் அவருக்கு வழங்கிதையடுத்து அங்கிருந்து அவரும் அவரது மகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். அகதிகள் முகாமில் சிக்கித்தவித்த அவர் பத்திரமாக மீட்கப்பட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன் தினம் ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று அவர் ஜெர்மனியிலிருந்து டெல்லி வந்தடைந்தார். அவரை வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தன்னை மீட்க நடவடிக்கை எடுத்தற்காக இந்திய தூதரகத்திற்கு அவர் நன்றி கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.