ஆப்கானிஸ்தான் ஜனாதிபதிக்கு 96 நாட்களுக்கு முன்னதாக வாழ்த்து தெரிவித்த மோடிபுதுடெல்லி,

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு அண்டை நாடுகளின் உறவை பேணும் வகையில் அந்த நாடுகளின் தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். இதேபோல், அவர் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷரப் கானிக்கு அண்மையில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பினார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், தற்போது ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவருக்கு, மோடி 96 நாட்களுக்கு முன்னதாகவே டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

அதில், ‘‘அஷரப் கானி உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களின் நீண்ட ஆயுளுக்காகவும், உடல் நலத்துக்காகவும் பிரார்த்திக்கிறேன். உங்களது பயணம் சிறக்க வாழ்த்துகள்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

தனக்கு 3 மாதங்களுக்கு முன்பே மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததால் ஆச்சரியம் அடைந்த அஷரப் கானியும் டுவிட்டரில் நன்றி தெரிவித்து பதில் அளித்தார். அதில், ‘‘பிரதமர் மோடியின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டேன். எனினும், எனது பிறந்தநாள் மே மாதம் 19–ந்தேதி ஆகும். உங்களின் மதிப்பு மிகு வார்த்தைகளுக்காக நன்றி’’ என்று குறிப்பிட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.