விபத்துக்கள் நடக்க இவையும் காரணங்களாக இருக்கலாம்...!கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை உற்று நோக்கும்போது, அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான் என்பது புலனாகிறது.

இதன் பின்புலத்தை ஆராய்ந்தபோது தெரியவந்தவை இவைகள்தான்.

1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய வண்டிகள். காரணம் சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ மட்டுமே எடுப்பார்கள். ஆதலால் போதிய கட்டுப்பாடு (டச்) கிடைப்பது கிடையாது.

2. சொந்த கார்களை அடிக்கடி ஓட்டாததால் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவை முறையாக பராமரிப்பின்றி பழுதாகி இருக்கலாம்.

3. தொலை தூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால், பழக்கமில்லாத சாலைகளில் இருக்கும் குழிகள் தெரியாமல், எதிர்பாராத தருணங்களில் காரைக் கட்டுபடுத்த இயலாமல் விபத்தை சந்திக்க நேரிடுவது.

4. காரை அடிக்கடி இயக்காததால் சில நேரங்களில் பிரேக்கிற்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அழுத்தி விடுவார்கள். சமீபத்தில் சென்னையில் வங்கி ஊழியர் ஒருவர் இப்படித்தான் விபத்தை ஏற்படுத்தி 2 உயிர்களை பறித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இவற்றை தவிர்ப்பது எவ்வாறு?

1. பொதுவாக அடிக்கடி காரை ஓட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது. இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமான வேகத்தில் செல்வது நல்லது.

3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்கு பயன்படுத்தும்போது ஒவ்வொருமுறையும் டயர் மற்றும் பின்பக்க சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.

4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து. ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர் விளக்குகள் எரிவது இல்லை. ஆதலால் விபத்து ஏற்படுவது எளிது. வாகனங்களை ஓட்டும்போது சொந்தப் பிரச்னைகளை மனதிலிருந்து துாக்கியெறிந்துவிடுங்கள். மனதில் குழப்பத்துடன் ஓட்டினால் சாலையில் இருந்து உங்கள் கவனம் தவறி விபத்தை சந்திக்க நேரிடும்.

5. நான்குவழிச்சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்கு மாறும்போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று கவனமாக பார்த்து மாறவும்.


6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை மறக்காமல் கவனிக்கவும் .

7. நமது சாலைகளில் 100 கி.மீ மேல் இயக்குவதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அந்த வேகத்திற்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.

8. சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தினமும் அதை ஓட்டவில்லையென்றாலும், தினம் வண்டியை ஸ்டார்ட் செய்து யுடிலிங் ஸ்டேஜில் சில நிமிடங்கள் வைத்து ஆஃப் செய்யவும். இது வண்டியின் இன்ஜின் பழுதாகாமல் இருக்க உதவும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.