எச்.ராஜாவை கண்டித்து மக்கள் நலக்கூட்டணி ஆர்ப்பாட்டம்மக்கள் நலக்கூட்டணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜாவின் மகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பேசிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலை வகித்தார்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜீவன், வேளச்சேரி மணிமாறன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் எச். ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டம் குறித்து ஜி.ராமகிருஷ்ணன் கூறிய தாவது:–

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, பா.ஜனதாவினர் தாக்குதல் நடத்தினார்கள். மாணவர் தலைவர் கன்னையாகுமார் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளார்கள்.

இதுகுறித்து பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, சீதாராம் யெச்சூரியை நாட்டை விட்டே துரத்த வேண்டும். கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜாவின் மகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்.

மன்னிப்பு கேட்கா விட்டால் தமிழகம் முழுவதும் மக்கள் நலக்கூட்டணி மற்றும் கம்யூனிஸ்டு இயக்கம் சார்பில் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.