முத்துப்பேட்டையில் பைக் மோதி ஒருவர் காயம்.முத்துப்பேட்டை    பேட்டை ரோடு     நடுத்தெருவை சேர்ந்தவர் முகைதீன் அப்துல் காதர் (57). இவர் குமரன் பஜாரில் சாலை ஓரம் உள்ள பழக்கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது சித்தமல்லி காமராஜர் காலனியை சேர்ந்த கோபால் மகன் அன்பழகன்(47) குடி போதையில் பைக்கில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊருக்கு சென்றபோது முகைதீன் அப்துல் காதர் மீது மோதினார். இதில் காயமடைந்த அவர், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்துப்பேட்டை சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.