தமிழக முதல்வர் குறித்து பேஸ்புக்கில் அவதூறு திமுக பிரமுகர் கைது.தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து பேஸ் புக்கில் அவதூறு வெளியிட்ட நாகூரை சேர்ந்த முதியவர் முகமது அமீன் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் நாகூர் கண்ணாடி நகரை சேர்ந்தவர் முகமது அமீன் (62). திமுக முன்னாள் மாவட்ட செயலாளர். தற்போது நாகூர் நகர கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளராக இருக்கிறார்.

இவர் கடந்த 2ம் தேதி மாலை தனது பேஸ் புக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பழைய புகைப் படத்தை (சினிமா காட்சி) வெளியிட்டு அதில் அவதூறான தகவல்களை வெளியிட்டராம்.
இது குறித்து நாகூர் போலீசில் நகர அதி முக செயலாளர் ரம்ஜான் அலி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து முகமது அமீனை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.