பதவி உயர்வு வேண்டி நிர்வாண பூஜை செய்யும் பேராசிரியர்: தன்னையும் வற்புறுத்துவதாக மனைவி புகார்தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அருகிலுள்ள பாரதிபுரம் மருத்துவ கல்லூரி உழியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் டாக்டர் செல்வராஜ் (வயது-50). இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி கல்பனா ஏற்கனவே இறந்து விட்டார்.

மனைவி இறந்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள எலத்தூர் பகுதியை சேர்ந்த வையாபுரி என்பவரின் மகள் கார்த்திகா (வயது-28)வை செல்வராஜ் 2–வது திருமணம் செய்து கொண்டார்.

கார்த்திகாவுக்கும ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால், பேராசிரியர் செல்வராஜ் இவரை ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணம் நடைபெற்று ஒரு வருடம் பிரச்சனையிலாமல் குடும்பம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் அவ்வப்போது பூஜை செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு செல்வராஜ் வெளியில் சென்று வந்தாகவும், இந்த நிலையில் வெளியில் பூஜை செய்வதை விட்டுவிட்டு பேராசிரியர் செல்வராஜ் தனது வீட்டில் ஒரு நாற்காலியில் நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்ய ஆரம்பித்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கார்த்திகா பலமுறை மருத்துவராகிய நீங்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கூறியும் அவர்கேட்கவில்லை எனத்தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அவர் தொடர்ந்து நிர்வாண பூஜை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அவரது மனைவி கார்த்திகாவையும் நிர்வாண பூஜை செய்யவேண்டும் என்று டாக்டர் செல்வராஜ் வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதற்கு கார்த்திகா உடன் படாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு அடிக்கடி அவரது பெற்றோர்கள் வீடான ஓமலூர் அருகே உள்ள எலத்தூருக்கு கார்த்திகா வந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் விவாகரத்து செய்வதாக கார்த்திகாவுக்கு பேராசிரியர் நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதை கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்த கார்த்திகா தனது பாட்டி மற்றும் தாய் ஆகியோரை அழைத்து கொண்டு கணவர் வீட்டிற்கு சென்று, நிர்வாண பூஜையில் இருந்த கணவனை பார்த்து இனி இருவரும் சேர்ந்து வாழலாம், ஆனால் நீங்கள் நிர்வாண பூஜை போன்ற செயலில் ஈடுபடக்கூடது என்றும் கூறியுள்ளார்.

ஆனால், பேராசிரியர் செல்வராஜ் என்னுடன் வாழ வேண்டும் என்றால் நான் கூறுவது போல் நீயும் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் உன்னை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன்னை அடித்து உதைத்ததால் காயம் அடைந்ததாக கூறி கார்த்திகா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இவரது வாக்குமூலத்தின் பேரில், ஓமலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தனக்கு கல்லூரி தலைவர் பதவி உயர்வு வரவேண்டும் என்பதற்காக பேராசிரியர் செல்வராஜ் அடிக்கடி நிர்வாண பூஜை செய்வதாகவும் அந்த வாக்கு மூலத்தில் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.