”மனித நேய ஜனநாயக கட்சி” தொடங்கினார் தமீமுன் அன்சாரி- விரைவில் கூட்டணி அறிவிப்புசென்னையில் மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்த தமீமுன் அன்சாரி புதிய கட்சி ஒன்றினைத் தொடங்கியுள்ளார். முன்னதாக, மனித நேய மக்கள் கட்சியிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது எனவும், தாங்கள் கூட்டவிருக்கும் பொதுக் குழுவே உண்மையான பொதுக் குழு எனவும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தமீமுன் அன்சாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமீமுன் அன்சாரி, "மனித நேய ஜனநாயக கட்சி"யை தொடங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து சென்னையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவர், கடந்த தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Thanks to    tamil.oneindia.com
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.