சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியானது: குலாம் நபி ஆசாத் தகவல்சென்னை, பிப். 13-

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் விறுவிறுப்படைந்துள்ளன. அந்த வகையில், சுமார் 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது தி.மு.க.வும் காங்கிரசும் அரசியல் களத்தில் மீண்டும் ‘கை’ கோர்த்துள்ளன.

தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இந்த விஷயம் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடமும் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்துள்ளார். இன்று அவர் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த குலாம் நபி ஆசாத், தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூட்டணியை உறுதி செய்தார். மேலும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று கூறிய அவர், ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரசின் இலக்கல்ல என்றும் அவர் கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் இணைய உள்ள வேறு கட்சிகள் குறித்து பேசுகையில், ‘வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தி.மு.க. முடிவு செய்யும் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.