தொழில் துவங்க மனைவியிடம் பணம் கேட்டது வரதட்சணையல்ல: உயர்நீதிமன்றம் உத்தரவு

தொழில் துவங்க மனைவியிடம் பணம் கேட்டதை, வரதட்சணையாக கருத முடியாது. கணவர் உட்பட 5 பேர் மீது, வரதட்சணை கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ரத்து செய்யப்படுகிறது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி கோமதி தங்கம். விஜயகுமார் மற்றும் அவரது தந்தை தேவராமன், தாய் காமாட்சி மற்றும் மைத்துனிகள் விண்ணிலா, தேன்மொழி வரதட்சணை கேட்டு, கொடுமைப்படுத்தி, மிரட்டல் விடுத்ததாக திருச்சி நீதித்துறை நடுவர் (ஜே.எம்.,4) நீதிமன்றத்தில் கோமதி தங்கம் வழக்குத் தொடர்ந்தார். இதை ரத்து செய்யக்கோரி விஜயகுமார் உட்பட 5 பேர் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர்.

நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவு: தொழில் துவங்க மனைவியிடம் விஜயகுமார் பணம் கேட்டுள்ளார். இதை, வரதட்சணை கேட்டதாக கருத முடியாது. எனவே, விஜயகுமார் உட்பட 5 பேர் மீது, வரதட்சணை கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ரத்து செய்யப்படுகிறது. தேவராமன் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை. அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும், அவர் விடுவிக்கப்படுகிறார். விஜயகுமார், காமாட்சி உட்பட 4 பேர் மீதான கொடுமைப்படுத்துதல், மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் விசாரணையை தொடரலாம் என்றார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.