முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியின் முகப்பு தோற்றம் அரசினால் ஆக்கிரமிப்பு என்று அகற்றப்பட்டது சம்மந்தமாக.....திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியின் முகப்பு தோற்றம் அரசினால் ஆக்கிரமிப்பு என்று அகற்றப்பட்டது சம்மந்தமாக,

முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியின் முகப்பை சிதைக்க காரணமான சமூக ஆர்வலர்களுக்கு வணக்கம்! எனது பெயர் C.N.ஆறுமுகனதான் (தாய் CNA).நான் ஒரு இயற்கை விவசாயி.

நீர் நிலைகளை ஆக்கிரமிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்.

இந்த முயற்சி செய்த சமூக ஆர்வலர்களுக்கு சில கேள்விகள்,

1. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு அந்த நீர் நிலைகள் பராமரிப்பு மேம்பட்டு இருக்கிறதா?

2.ஆக்கிரமிப்பு அற்ற பல நீர் நிலைகள் வெங்காயதாமரை மண்டி கிடக்கிறதே? அதை அகற்ற முயற்சி செய்திருக்கிறீர்களா?

3.பான் பராக்,குட்கா போன்றவை தடை செய்ய பட்டுள்ளது.அனால் அவை எல்லா கடைகளிலும் தாராளமாக கிடைக்கிறது,அந்த தொழில்சாலைகள் இருப்பது அரசுக்கு தெரியாதா? அல்லது அதை விற்கும் கடைகள் உங்களுக்கு தெரியாதா?

4.பல நீர் நிலைகளை அரசே ஆக்கிரமித்து ஆட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் மேலும் பல கட்டிடங்களை நிர்மாணித்து இருக்கிறது அதை எந்த நீதி மன்றம் அப்புற படுத்த போகிறது?

5.கேரிபேக் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்று சொல்லும் அரசுக்கு அந்த தொழில்சாலைகள் இருக்கும் இடம் தெரியாதா?அல்லது அதை விற்கும் கடைகள் உங்களுக்கு தெரியாதா?

6.ஒரு மரத்தை உருவாக்க எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கு தெரியுமா?நீங்கள் ஒரு மரத்தை வளர்த்து இருக்கீர்களா?
7.நூறு நாள் வேலை திட்டத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் கடந்த சில வருடங்களில் எத்தனை மரகன்றுகள் வைத்துள்ளார்கள்? அதில் எத்தனை மரகன்றுகள் வளர்ந்துள்ளன? அதற்கான பொருட்செலவு எவ்வளவு என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற்றிருக்கிறீர்களா?

8.கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதில் எத்தனை ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படுகிறது?எத்தனை ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்? அதற்காக ஏதேனும் போராட முயற்சி எடுத்திருக்கிறீர்களா?

9.நம் அருகில் நடக்கும் பேராபத்தான மீத்தேன் திட்டத்திற்காக மக்களை திரட்ட ஏதேனும் முயற்சி செய்தது உண்டா?

10.குடி குடியை கெடுக்கும் என்று சொல்லி கொண்டு ஊத்தி கொடுக்கும் அரசுக்கு எதிராக போராடியது உண்டா?

11.இயற்கை சூழலில் ஒரு பாதுகாப்பான பள்ளியை பெண்களுக்குகாக ஏற்படுத்தி பலருக்கு கல்வியை போதிக்கும் நிவாகத்திற்கும் அதில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மனவலியை ஏற்படுத்துவது நியாயமா?

12.பல இடங்களில் அரசு பல லட்சம் பொருள் செலவில் சாலையோர பூங்கா அமைத்துள்ளதே அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? இந்த பள்ளியின் முகப்பை ஒரு சாலையோர பூங்காவாக நீங்கள் பார்த்திருந்தால் அதை அழிக்க நீங்கள் காரணமாக இருந்திருப்பீர்களா?

13.இந்த பள்ளியின் முகப்பை கடக்கும் போதும் அந்த மரங்களை பார்க்கும் போதும் மனது புத்துணர்ச்சி பெறுமே,அதை நான் உணர்திருக்கிறேன் நீங்கள் உணர்திருக்கிறீர்களா? இப்போது அந்த மரமில்லா இடத்தை பார்க்கும் போது மனது வலிக்கிறதே!

14.அரசே பல நிர்வாக கோளாறுகளுக்கு காரணமாக இருக்கும் போது, தனி மனித விருப்பு வெறுப்புகளுக்காக சிலரை பழிவாங்க நினைப்பது சரியா?

எது எப்படியோ,நீர் நிலைகளை பாதுகாக்க நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது,அனால் இங்கு நடந்திருப்பது பாதுகாப்பாக இருந்த நீர் நிலையும்,இயற்கை சூழலும் சீரழிக்கபட்டு இருக்கிறது.நான் அப்படித்தான் உணர்கிறேன். நீங்கள்.........?

மொத்தத்தில் அரசும் நீங்களும் அழித்திருப்பது ஒரு சாலையோர பூங்காவை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.