முத்துப்பேட்டையில் இன்று தீ விபத்து: முதியவர் தீயில் கருகி பலிதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை    கொய்யா தோப்பை  சேர்ந்தவர் சங்கரன் (வயது–80) கொத்தனார். இவரது மனைவி தனபாக்கியம். நேற்று இரவு சங்கரன் தனது குடிசை

வீட்டில் படுத்து இருந்தார். அவரது அருகில் தனபாக்கியம், பேரப்பிள்ளைகள் விக்னேஷ், தினேஷ், சிவசங்கர், பவித்ரா ஆகியோர் படுத்து இருந்தனர்.

 

இந்நிலையில் இன்று காலை 3 மணி அளவில் வீட்டில் எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கு கீழே விழுந்து தீ பிடித்தது. இதனை கண்ட தனபாக்கியம் மற்றும் அவரது பேர குழந்தைகள் வெளியே வந்து விட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த சங்கரன் வெளியே வர முடியாத நிலையில் அவர் மீது கூரை சரிந்து விழுந்து உடல் கருகியது.

 

இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை முத்துப்பேட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த தீ விபத்து குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தீ விபத்தில் முதியவர் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share on Google Plus

1 comments:

  1. Koyyah thoppu muthupettai arugae ila. Muthupettailathan iruku.

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.