சிங்கப்பூரிலிருந்து அண்ணன் பாஸ்போர்ட்டில் திருச்சிக்கு வந்த தம்பி கைதுசிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு அண்ணன் பாஸ் போர்ட்டில் வந்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமான சேவை இயக்கப் பட்டு வருகிறது. இந்த விமானம் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு பயணிகளை ஏற்றி வந்தது. பயணிகளின் ஆவணங்களையும் உடைமைகளையும் வான் நுண்ணறிவு மற்றும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது வாலிபர் ஒருவரின் பெயரைக் கேட்ட போது அவர் சேவுகன் என கூறினார். ஆனால் பாஸ்போர்ட்டில் ஆறுமுகம் என இருந்தது. இதனால் சுதாகரித்த அதிகாரிகள் அந்த வாலிபரை தீவிரமாக விசாரித்தனர்.

இதில் புதுக் கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா ஆணைவாரியசை ் சேர்ந்த பெரிய கருப்பன் மகன் சேவுகன் என தெரிந்தது. மேலும் அவரது அண்ணன் ஆறுமுகம்(48) பெயரில் உள்ள பாஸ் போர்ட்டில் வந்தது தெரிந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை ஏர் போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சேவுகனை கைது செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.