நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்: ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினர்.சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூவில் இருந்து டிஜிபோட்டி நாட்டிற்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 74 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது.

விமானம் புறப்பட்டு 20 நிமிடத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வலது பக்கம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது. அத்துடன் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இதனால் விமானி உடனடியாக மொகடிஷூக்கு விமானத்தை திருப்பி அவசரமாக தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும் விமானப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதில் அதிக உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் இருவர் காயம் அடைந்துள்ளனர் என்றும், அதில் ஒருவர் கவலைக்கிடமான வகையில் உள்ளார் என்று அந்த விமான நிறுவனத்தின் பிரதிநிதி அப்டினாசீர் நுர் கூறியுள்ளார்.

மேலும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.