ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை புறக்கணியுங்கள்: அமெரிக்கர்களுக்கு டோனால்ட் டிரம்ப் வேண்டுகோள்ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை புறக்கணியுங்கள் என்று அமெரிக்க மக்களுக்கு குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட பிரச்சாரம் செய்துவரும் டோனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் சான் பேர்னாடினோ நகரில் சயிட் ரிஸ்வான் பாருக் மற்றும் அவரது மனைவி ஆகியோர், கடந்த டிசம்பரில் நடத்திய துப்பாக்கி தாக்குதலில், 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர். அவரது ஆப்பிள் ஐபோனை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆனால், அவரது போன் ரகசிய குறியீடு மூலம் லாக் செய்யப்பட்டுள்ளது.

இதனால், கலிபோர்னியா நீதிமன்றம் அந்த கைப்பேசியில் உள்ள தகவல்களை பார்ப்பதற்கு உதவுமாறு, ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஆப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டது. ஆப்பிள் போனிற்குள் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ.-யை நுழைய அனுமதித்தால், வருங்காலத்தில் அவர்கள் ஆப்பிள் போன் வாடிக்கையாளர்களின் போனிற்குள் முறையற்ற வகையில் நுழைய அது வழிவகுத்துவிடும் என்று ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இந்த நீதிமன்ற உத்தரவை ஆப்பிள் சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆப்பிளின் இந்த முடிவிற்கு டோனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டம் ஒன்றில் இது குறித்து அவர் பேசுகையில் “ஆப்பிள் நிறுவனம், தீவிரவாதியின் போனில் உள்ள தகவல்களை தரும் வரையில் அந்த நிறுவன தயாரிப்புகளை புறக்கணியுங்கள்” என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆப்பிள் தயாரிப்புகளை புறக்கணியுங்கள் என்று டோனால்ட் டிரம்ப் பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் பேசிய தகவல்கள் ஆப்பிள் ஐ போன் மூலம் அவரது டுவிட்டர் கணக்கில் பதியப்பட்டு வந்தது தனிக் கதை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.