எச்.ராஜா மீது போலீசில் புகார் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சி சார்பில் போலீசில் புகார்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சிவஞானம் தலைமையில் வால்பாறை எம்.எல்.ஏ. ஆறுமுகம், முன்னாள் எம்.பி.நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

கடந்த 21–ந் தேதி பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அளித்த பேட்டியில் டெல்லியில் ஜவகர்ஹலால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் குறித்து பேசும் போது கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜா தனது மகளை சுட்டுக் கொல்ல வேண்டும். எனது மகளாக இருந்தால் நான் சுட்டுக்கொன்றிருப்பேன். ராஜாவின் மகள் சாகடிக்கப்பட வேண்டும் என்று பேசி இருந்தார்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பியுமான சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. ராஜா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்டவிரோதமாக பேசி உள்ளார். மேற்கூறிய 3 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், கட்சிகளின் பொறுப்பான தலைவர்களாகவும் உள்ளனர். அவர்கள் மீது அவதூறு பரப்பும் விதத்திலும், மக்கள் மத்தியில் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் விதத்திலும் பேட்டி அளித்து உள்ளார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.