முத்துப்பேட்டை அருகே விபத்து: விவசாயி படுகாயம்



முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகத்தை சேர்ந்தவர் சந்துரு என்ற சந்திரசேகரன் (வயது32). விவசாயி. சம்பவத்தன்று இவர் திருத்துறைப்பூண்டியில் இருந்து தில்லைவிளாகத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நாச்சிக்குளத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகரனை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமானுஜம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.