சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் ஒருவர் அதிரடி கைதுபனமரத்துப்பட்டி: ஜல்லுாத்துப்பட்டியில், எட்டு வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த ஜல்லுாத்துப்பட்டியை சேர்ந்த, எட்டு வயது சிறுமி, அரசுப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 22ந்தேதி இரவு 9:00 மணி அளவில், பால் வாங்குவதற்கு, அப்பகுதியில் உள்ள தனசேகரன்,22, என்பவரின் வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் சிறுமியை அழைத்து சென்ற தனசேகரன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த பொதுமக்கள், தனசேகரனுக்கு தர்ம அடி கொடுத்து, சிறுமியை மீட்டனர். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி, சேலம் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். தனசேகரனை, பனமரத்துப்பட்டி போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.