தஞ்சாவூரிலும் விஜயகாந்த் ருத்ரதாண்டவம்..... நாக்கை துருத்தி அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு!!தஞ்சாவூர்: தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தம்முடைய கட்சி நிர்வாகி ஒருவரை நாக்கை துருத்தியபடி அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க கோரி கடந்த டிசம்பர் 28-ந் தேதி தஞ்சாவூரில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடம் அருகே பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஜெயலலிதாவின் பேனரை கிழிக்குமாறு விஜயகாந்த் கூற, அக்கட்சி தொண்டர்களும் கிழித்தெறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், தஞ்சாவூர் முழுவதும் தேமுதிகவினர் பேனர்களை கிழித்து தீ வைத்து எரிந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் இன்று தஞ்சாவூர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜராகி மதுரை உயர்நீதிமன்ற கிளை கொடுத்த முன் ஜாமீனை சமர்பித்தார். இதை நீதிமன்றம் ஏற்று அவருக்கு ஜாமீன் கொடுத்தது. முன்னதாக தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான தேமுதிகவினர் விஜயகாந்த்தைப் பார்க்க கூடிவிட்டனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட கடுப்பாகிப் போனார் விஜயகாந்த். அத்துடன் நாக்கை துருத்தி கையை ஓங்கியபடி கட்சி நிர்வாகி ஒருவரை அடிக்கவும் பாய்ந்தார் விஜயகாந்த். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவரை அடிக்க போனார் விஜயகாந்த். டெல்லியில் ஜெயா டிவி செய்தியாளரை நோக்கி 'தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ' என எகிறினார். சென்னையில் நிதானமே இல்லாமல் பத்திரிகையாளர்களைப் பார்த்து .த்தூ.... என காறி உமிழ்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் படங்களில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த்; படப்பிடிப்பின் போது எஸ்.ஏ.சி. பட் பட்டென அடித்துவிடுவார்; அவரிடம் இருந்துதான் விஜயகாந்துக்கு யாரைப் பார்த்தாலும் அடிக்கும் பழக்கம் வந்திருக்கும் என நடிகை ராதிகா கூறியிருந்தார்.

தற்போது 'தஞ்சாவூரில்' வேலையைக் காட்டிவிட்டார் கேப்டன்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.