முத்துப் பேட்டை சேக்தாவூது ஒலியுல்லா கந்தூரி விழா முன்னேற்பாடு பணிகள் ஆய்வு.முத்துப் பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சேக்தாவூது ஒலியுல்லா தர்காவின் 714ம் ஆண்டின் பெரிய கந்தூரி விழா வரும் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முத்துப்பேட்டை ஒன்றியக் குழு அலுவலகத்தில் மன்னார்குடி ஆர் டிஓ செல்வசுரபி தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது.

திருத்துறைப் பூண்டி தாசில்தார் பழனிவேல், முத்துப் பேட்டை டிஎஸ்பி அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஒன்றியக் குழு தலைவர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் முருகேஷ் மற்றும் தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப், டிரஸ்டி தமீம் அன்சாரி சாஹிப் பங்கேற்றனர்.

பின்னர் மன்னார்குடி ஆர் டிஓ செல்வ சுரபி தலைமையில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் ஊர்வலம் செல்லும் பாதை, பக்தர்கள் செல்லும் பாதைகளை ஆய்வு செய்தனர். மேலும் அரசு சார்பில் செய்யப் படும் அடிப்படை வசதி, மின்சாரம், சாலை வசதிகளை ஆய்வு செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.