சொந்த செலவில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு சத்துணவு வழங்கி வருகிறார் முஹம்மது அலி ஜின்னா.....!!ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி ஊராட்சி தலைவராக இருப்பவர் எம்.முகம்மது அலி ஜின்னா.
தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்.
கடந்த 10.02.2016 லிருந்து சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு கிடைக்காமல் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

ஏழை மாணவர்களின் பசியை போக்கும் வகையில் ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ள முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தமது சொந்த செலவில்...

ஏர்வாடி, தர்ஹா நகர், தொத்தன் மகன்வாடி, சடைமுனியவலசை மற்றும் சின்ன ஏர்வாடி, முத்தரையர் நகர் உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தினமும் தனது சொந்த செலவில் மதிய உணவு வழங்கி வருகின்றார்.

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எதுவென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது பசித்தவர்களுக்கு உணவளிப்பதே இஸ்லாத்திலேயே சிறந்த செயல் என்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்றும் சமுதாயம் உலகத்திற்கே முன்மாதிரி சமுதாயம் என்பதை உலகம் உணர்ந்து கொண்டு இருக்கிறது.

 

Tanks To wwww.vikaluthur .in
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.